ADDED : ஜூலை 08, 2026 07:29 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த உடையாண்டஹள்ளி அருகே போடம்பட்டியை சேர்ந்தவர் அரியப்பன். தி.மு.க., விவசாய அணி மாநில துணைச்செயலர். இவரது மகன் அன்பானந்தம், 30, தி.மு.க., 'ஜென் இசட்' பிரிவின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக உள்ளார்.
கடந்த மாதம் முதல்வர் விஜய்க்கு எதிராக அவதுாறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது தொடர்பாக கெலமங்கலம், த.வெ.க., கிழக்கு ஒன்றிய செயலர் மூர்த்தி, 37, புகார் செய்தார்.
அன்பானந்தம் மீது, ராயக்கோட்டை போலீசார் வழக்குபதிந்து தேடினர். கடந்த, 14 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர், தேன்கனிக்கோட்டை ஜே.எம்., நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் முன் நேற்று சரணடைந்தார். அவரிடம் போலீஸ் காவலில் விசாரிக்க, ராயக்கோட்டை போலீசார் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி, ஒரு நாள் காவல் வழங்கி உத்தரவிட்டார். அதனால், அன்பானந்தத்தை, ராயக்கோட்டை அழைத்துச்சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
