/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., சார்பில் நாளை கி.கிரியில் அமைதி பேரணி
/
தி.மு.க., சார்பில் நாளை கி.கிரியில் அமைதி பேரணி
ADDED : ஆக 06, 2025 01:11 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 7ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் நாளை காலை, 9:00 மணிக்கு என், தலைமையில் அமைதி பேரணி நடக்கிறது.
கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலை, சென்ட்ரல் தியேட்டர் அருகிலிருந்து அமைதி பேரணி தொடங்கி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலுள்ள கருணாநிதி சிலையில் நிறைவடைகிறது.
அங்கு கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அவரவர் சார்ந்த பகுதிகளில் காலை, 8:00 மணிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

