தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்


ADDED : ஆக 04, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: வெப்பாலம்பட்டி கிராம, திரவுபதியம்மன் கோவிலில், துரியோதனன் படு-களம் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவ மஹாபாரத விழா கடந்த, 16ம் தேதி கொடியேற்-றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராசன், மகாபாரத சொற்பொழிவும், நந்தகோபால் கவிவாசிப்பும், தர்மபுரி மாவட்டம், வேப்பலஅள்ளி வெற்றிவேல் நாடக சபா தெருக்கூத்து குழுவினரின் நாடகமும் நடந்தது. இதில், கிருஷ்ணன் பிறப்பு, அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை, வில் வளைப்பு, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், சித்திரசேனன் சண்டை, அரவான் சாபம், அர்ச்சுணன் தபசு ஆகிய நிகழ்ச்-சிகள் நடந்தன. நேற்று, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்-தது. 5 டன் களிமண்ணால் துரியோதனின் ராட்சத சிலை செய்து, பீமனும், துரியோதனனும் சண்-டையிட்டு, இறுதியில் பீமன் தன் கதாயுதத்தால், துரியோதனின் தொடையில் அடித்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரவுபதி கூந்தல் முடிக்கும் நிகழ்வும் நடந்தது. திருநங்-கையின் கையால், ஆண்களும், பெண்களும் துடைப்பத்தால் அடிவாங்கி வேண்டுதல் நிறை-வேற்றினர். பின்னர் நடந்த தீமிதி விழாவில் ஏரா-ளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதல் நிறை-வேற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us