தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மலை கிராமங்களில் கல்வி குழுவினர் ஆய்வு

மலை கிராமங்களில் கல்வி குழுவினர் ஆய்வு

மலை கிராமங்களில் கல்வி குழுவினர் ஆய்வு


ADDED : ஜூலை 07, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை; கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலு-வலர் மதன்குமார் தலைமையில், மொத்தம், 6 கல்வி குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், தளி மற்றும் அஞ்செட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தக்கட்டி, மாவனட்டி, உரிகம், அஞ்செட்டி, சூள-குண்டா, கரடிக்கல், நாட்றாம்பாளையம், சீங்-கோட்டை, தொட்டமஞ்சி, கேரட்டி ஆகிய மலைக்கிராமங்களில் கள ஆய்வு செய்தனர்.

அப்போது, பிளஸ் 2 முடித்து விட்டு, உயர்கல்வி பயில கல்லுாரியில் சேராத, 119 மாணவ, மாண-வியரின் வீடுகளுக்கு, முதன்மை கல்வி அலு-வலர் மதன்குமார் மற்றும் குழுவினர் நேரில் சென்று, அருகிலுள்ள ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், கலை கல்லுாரிகள், நர்சிங் கல்லுாரியில் நிரப்பப்-படாமல் உள்ள இடங்கள் குறித்து, பெற்றோருக்கு எடுத்துரைத்தனர்.

மேலும், மாணவ, மாணவியர் உயர்கல்வி சேர்-வதன் அவசியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து

விளக்கினர்.

இதன் விளைவாக, மாணவர்கள் மற்றும் அவர்க-ளது பெற்றோர், இன்னும் ஓரிரு நாட்களில், கல்-லுாரியில் சேர்க்கை பெற விருப்பம் தெரிவித்-துள்ளதாக, முதன்மை கல்வி

அலுவலர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us