/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் பதுக்கிய மளிகை கடை உரிமையாளர் கைது
/
புகையிலை பொருட்கள் பதுக்கிய மளிகை கடை உரிமையாளர் கைது
புகையிலை பொருட்கள் பதுக்கிய மளிகை கடை உரிமையாளர் கைது
புகையிலை பொருட்கள் பதுக்கிய மளிகை கடை உரிமையாளர் கைது
ADDED : ஜூலை 31, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஹட்கோ ஸ்டேஷன் போலீசாருக்கு, வெங்கடேஷ் நகரிலுள்ள சப்தகிரி நகர் பள்ளி அருகே, தனியார் குடோனில் தடை செய்த புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.
எஸ்.ஐ., கணேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று, குடோனில் சோதனை செய்தனர். அங்கு, விற்பனைக்காக, 50,000 ரூபாய் மதிப்புள்ள, 112 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து, புகையிலை பொருட்களை பதுக்கிய, ஓசூர் அலசநத்தம் வெங்கடேஷ் நகரை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, 40, என்பவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.