'எல்நினோ'வால் வறட்சியின் பிடியில் கி.கிரி, தர்மபுரி மாவட்டம் இழப்பு, குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க விவசாயிகள் வலியு-றுத்தல்
'எல்நினோ'வால் வறட்சியின் பிடியில் கி.கிரி, தர்மபுரி மாவட்டம் இழப்பு, குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க விவசாயிகள் வலியு-றுத்தல்
ADDED : ஜூலை 02, 2026 01:47 AM
கிருஷ்ணகிரி: 'எல்நினோ' என்ற வறட்சி காலநிலையால் தமிழகத்தில், 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இவற்றால் ஏற்படும் இழப்பு, குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'எல்நினோ' என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்க-டலில் கடல் மேற்பரப்பு நீர், வழக்கத்திற்கு மாறாக வெப்பமடை-வதை குறிக்கும் காலநிலை நிகழ்வு. இது தட்பவெப்ப நிலை-களில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தி, சில இடங்களில் வறட்சியையும், அதிக மழையையும் உருவாக்கும். இந்தி-யாவில், 315 மாவட்டங்கள் வறட்சி மற்றும் குறைவான மழைப்-பொழிவு அபாயத்தில் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், திருச்சி, திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு என, மத்திய அரசு எச்சரித்துள்-ளது.
குறைந்த சராசரி மழையளவு
தர்மபுரி மாவட்டத்தை பொருத்தவரை ஜன., முதல், டிச., வரை, பெய்யும் சராசரி மழையளவு, 942 மி.மீ., ஆகும். கடந்த, 6 மாதங்களில், 182 மி.மீ., அளவில் மட்டுமே மழை பெய்துள்ளது. இது ஆண்டு சராசரி அளவில், 19 சதவீதம் மட்டுமே.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, ஆண்டுதோறும் பெய்யும் சராசரி மழையளவு, 830.50 மி.மீ., ஆகும். ஆனால் கடந்த, 6 மாதங்களில், 208.76 மி.மீ., அளவே, மழை பெய்துள்-ளது. இதில், மார்ச் முதல், மே வரை பெய்யும் கோடை மழையின் சராசரியான, 158.30 மி.மீ., அளவு மழையில், 129.79 மி.மீ., அளவில் மட்டுமே மழை பெய்துள்ளது. இது சராசரியை விட, 18.01 மி.மீ., குறைவு. இருப்பினும் ஜூன் மாதத்தில் பெய்யும் சராசரி மழையளவான, 40.70 மி.மீ., விட
கூடுதலாக, அதாவது, 77.76 மி.மீ., அளவில் பெய்துள்ளது.
பாதிக்கும் சாகுபடி
இது குறித்து, விவசாயிகள்
கூறியதாவது:
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பரவலாக நெல், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, தென்னை, 'மா' சாகுபடி நடக்கிறது. இதில், 'மா' சாகுபடியில், பூச்சி தாக்குதல், உரிய விலை இல்லாதது மற்றும் வறட்சியால் அழிவின் விளிம்பில் உள்ளது. மேலும் வறட்சி ஏற்பட்டால் தென்னை, நெல், கரும்பு சாகுபடியும் பெரிய அளவில் பாதிக்கும்.
தற்போதே பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு துவங்கி உள்-ளது. மழை பொழிவு மேலும் குறைந்தால், இந்த மாவட்டங்-களில் கடும் வறட்சி ஏற்படும். இவற்றை தடுக்க, தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறிய தாவது:
'எல்நினோ' தாக்கத்தால் வறட்சி ஏற்படும் மாவட்டங்களை கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை
களையும் மேற்கொண்டுள்ளது. 'எல்நினோ' தாக்கத்தால் கர்நாடக மாநிலத்தில் மழைப்பொழிவு குறைந்து, காவிரியாற்றில் நீர்வ-ரத்தும்
குறைந்துள்ளது.
பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், கிடைக்கப்பெறும் நீரை சிக்கனமாகவும், திட்டமிட்ட முறை-யிலும் வினியோகிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வரும் காலங்களில், அதிக நீர் தேவைப்படும் பயிர்களுக்கு பதி-லாக, குறுகிய கால, பருப்பு வகை பயிர்கள், ராகி உள்ளிட்ட பயிர் சாகுபடிக்கு, வேளாண்மை துறை மூலம்,
விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.
நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்கும் நோக்கில், பல்வேறு நிறுவ-னங்களின் சி.எஸ்.ஆர்., நிதி மூலம், 24 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, மழைநீர் உறிஞ்சுதல், நிலத்தடி நீர்மட்ட உயர்வை ஊக்குவிக்கும், முக்கிய நடவடிக்கையாக அமையும்.
இதுதவிர, மழைநீர் சேகரிப்பு, தடுப்பணைகள் அமைத்தல், நீர் உறிஞ்சு குழிகள் உள்ளிட்ட பல்வேறு நீர்வள மேலாண்மை நடவ-டிக்கைகளும் எடுத்து வருகிறோம். மாவட்டத்தின் முக்கிய நீராதா-ரங்களான, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மற்றும் கெலவரப்-பள்ளி அணைகளில் தற்போது போதுமான அளவு நீர் உள்ளது. அதே நேரத்தில், சூளகிரி - சின்னாறு அணை மற்றும் பாம்பாறு அணைகளுக்கு, தற்போது நீர்
வரத்து இல்லை. இதையும் மாவட்ட
நிர்வாகம் கண்காணித்து, தேவையான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
