பிளாட்பாரத்தில் 6 கிராம் நகை போலீசில் ஒப்படைத்த பயணி
பிளாட்பாரத்தில் 6 கிராம் நகை போலீசில் ஒப்படைத்த பயணி
ADDED : ஜூலை 06, 2026 01:35 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: விருதுநகர் மாவட்டம், சாத்துார் செல்வதற்காக, முத்துக்குமார் என்ற பயணி, நேற்று முன்தினம் மாலை, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன், இரண்டாவது பிளாட்பாரத்தில், நாகர்கோவில் எக்ஸ்-பிரஸ் ரயிலுக்கு காத்திருந்தார். பிளாட்பாரத்தில் நடந்து சென்ற போது, 6 கிராம் தங்க நகை கேட்பாரற்று கிடந்தது.
இதை பார்த்த பயணி முத்துக்குமார், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் செந்தில்குமார் என்-பவரிடம் நகையை வழங்கி, உரியவர்களிடம் ஒப்படைக்க கூறி விட்டு, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சென்று விட்டார்.மேலும், ரயில்வே ஹெல்ப்லைன் எண்ணான, 139க்கு போன் செய்து முத்துக்குமார் தகவல் தெரிவித்தார்.
இந்த நகை, ஓசூர் ரயில் நிலைய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்-பட்டுள்ளது. உரியவர்களிடம் ஒப்படைக்கும் வகையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
