தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காதலனை கரம் பிடித்த இளம்பெண்ணிடம் பெற்றோர் புகாரால் போலீசார் விசாரணை

காதலனை கரம் பிடித்த இளம்பெண்ணிடம் பெற்றோர் புகாரால் போலீசார் விசாரணை

காதலனை கரம் பிடித்த இளம்பெண்ணிடம் பெற்றோர் புகாரால் போலீசார் விசாரணை


ADDED : அக் 04, 2026 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2026 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே கலகோபசந்திரத்தை சேர்ந்-தவர் மதுகுமார், 24. கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 8 ஆண்டு-களாக, தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்த தற்போது, 19 வயதான இளம்பெண்ணை காதலித்து வந்தார். இதையறிந்த அப்-பெண்ணின் பெற்றோர் கடந்த, 3 ஆண்டுக்கு முன், 45 வயதுள்ள நபருக்கு, 16 வயதாக இருந்த அப்பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

குழந்தை திருமணம் நடந்த நிலையில், அது குறித்து, அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்ய முடியாத அளவிற்கு, அப்-பெண்ணை வீட்டில் வைத்திருந்தனர். தன் காதலனுடன் மொபைல்போனில் பேசி வந்த அப்பெண் கடந்த, 30ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறி, கர்நாடக மாநிலத்திற்கு தன் காத-லனை அழைத்து சென்று திருமணம் செய்தார்.

இதையறிந்த அப்பெண்ணின் பெற்றோர், வீட்டிலிருந்த, 20 பவுன் நகை மற்றும் பணத்தை எடுத்து கொண்டு, மாயமாகி விட்-டதாக, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் செய்தனர். அதுகுறித்து விசாரிக்க, அப்பெண்ணை நேற்று போலீசார் அழைத்தனர்.

தன் காதல் கணவருடன் அங்கு சென்ற இளம்பெண், தான் நகையை எடுத்து செல்லவில்லை. தனக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததால் அது செல்லாது. என் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கொலை மிரட்டல் விடுத்து வருவதாக, அப்பெண், போலீசாரிடம் தெரிவித்ததுடன், காதல் திருமணம் செய்த மதுகுமாருடன் வாழ போகிறேன் என கூறினார். அதனால், அவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us