/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பி.ஓ.பி., விநாயகர் சிலைகள் தயாரிப்பு; கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்
/
பி.ஓ.பி., விநாயகர் சிலைகள் தயாரிப்பு; கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்
பி.ஓ.பி., விநாயகர் சிலைகள் தயாரிப்பு; கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்
பி.ஓ.பி., விநாயகர் சிலைகள் தயாரிப்பு; கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்
ADDED : ஜூலை 31, 2024 07:00 AM
கிருஷ்ணகிரி: பி.ஓ.பி., விநாயகர் சிலை தயாரிப்பை, அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பாரம்பரிய சிலைகளின் தயாரிப்பு குறைந்துள்ளதாக, தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்., 7 ல் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 3 மாதங்களாக விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவிற்கு விற்பனை செய்யப்படுகிது. கடந்த சில ஆண்டுகளாக வட மாநில தொழிலாளர்கள், பி.ஓ.பி., எனப்படும் 'பிளாஸ்டர் ஆப் பாரீஸ்' வேதிப்பொருள் மூலம், விநாயகர் சிலைகளை தயாரிப்பதால், மண் மற்றும் மாவினால், உள்ளூரில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளின் விற்பனை குறைந்து வருவதாக, சிலை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:விநாயகர் சிலை தயாரிக்க பயன்படும் பழைய பேப்பர், பெயின்ட், கூலியாட்கள், மின் கட்டண உயர்வு போன்றவற்றால், கடந்தாண்டை விட, 1,000 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. ஆனால், ஆண்டுக்காண்டு பாரம்பரிய விநாயகர் சிலைகளின் தயாரிப்பு குறைந்து வருகிறது.
காரணம், ஓசூர், ராயக்கோட்டையில், அரசு தடை செய்த பி.ஓ.பி., சிலைகளை தயாரிக்கின்றனர். இச்சிலைகள், 10 ஆண்டுகள் ஆனாலும் தண்ணீரில் கரையாது. இதனால், அரசு இதற்கு தடைவிதித்திருந்தும், 10க்கும் மேற்பட்டோர் வெளிப்படையாகவே, பி.ஓ.பி., சிலைகளை தயாரித்து விற்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. அரை அடி முதல், 10 அடி வரை சிலைகளை தயாரிக்கிறோம். ஆனால், சிலை தயாரிப்பதற்கு முன்பே, போலீசார் எங்களை அழைத்து விதிமுறைகளை தெரிவிப்பதில்லை.
சிலைகளை விற்பனை செய்யும்போது, இத்தனை அடி சிலைகளை, விற்பனை செய்யக்கூடாது என, போலீசார் தடை விதிப்பதால், எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசு இவற்றை முறைப்படுத்தி, எங்களின் வாழ்வாதாரத்தை காக்க முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

