தாயுமானவர் திட்டத்தில் 2 நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்கல்
தாயுமானவர் திட்டத்தில் 2 நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்கல்
ADDED : ஜூலை 03, 2026 02:52 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் நாளைமற்றும் வரும், 6-ம் தேதி வயது முதிந்தோர் மற்றும் மாற்-றுத்தினாளிகளின் இல்லங்களுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட, 29,287 வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் ரேஷன் அட்டைக-ளுக்கு தாயுமானவர் திட்டத்தின் மூலம், அவர்களின் வீடுகளுக்கு சென்று, பொருட்கள் வழங்க, முதல் நாளில், 155 குழு, 2ம் நாள் குழு, 154 என மொத்தம், 309 குழு அமைக்கப்பட்டு, 463 வாக-னங்களை கொண்டு வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்-கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் வரும் ஜூலை, 4 மற்றும், 6-ம் தேதி-களில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் ரேஷன் அட்டைகளுக்கு, வினி-யோகம் செய்யப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
