/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
/
அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
ADDED : பிப் 11, 2025 07:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தி, நேற்று காலை முதல், இன்று காலை வரை, 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.
அப்போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின் போது வழங்காத, 21 மாத நிலுவை தொகை,
முடக்கப்பட்ட அகவிலைப்-படி நிலுவை, நிறுத்தி வைத்துள்ள சரண் விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நுாலகர், எம்.ஆர்.பி.,
செவிலியர், பி.பி.பி., சி.ஓ.இ., உள்ளிட்ட சிறப்பு காலமுறை தொகுப்பூதிய, மதிப்பூதிய நிலையில்
பணியாற்றும் ஊழியர்க-ளுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை, சென்னை உயர்நீதிமன்ற ஆணை படி,
பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நிய-மனங்களுக்கு, 25
சதவீதம் வழங்கி வந்ததை தமிழக அரசு, 5 சத-வீதமாக குறைத்திருப்பதை கைவிட வேண்டும்,
என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில், மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், அரசு ஊழியர் சங்க மாநில துணை
பொதுச்செயலாளர் அண்ணா குபேரன் உள்பட பலர் பேசினர். மாவட்ட பொருளாளர் நந்த-குமார் நன்றி
கூறினார்.

