தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விவசாய கடன் முழுதும் தள்ளுபடி செய்ய தீர்மானம்

விவசாய கடன் முழுதும் தள்ளுபடி செய்ய தீர்மானம்

விவசாய கடன் முழுதும் தள்ளுபடி செய்ய தீர்மானம்


ADDED : ஜூலை 09, 2026 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: அனைத்து விவசாய கடன்களையும், அரசு முழுமையாக தள்ளு-படி செய்ய வேண்டும் என, விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, என்.தட்டக்கல் கிராமத்தில் வட்ட அளவிலான தமிழ்நாடு விவசாய சங்க கூட்டம் நடந்தது. வட்ட தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, ஆகியோர் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய விவசாயமான, 'மா' சாகு-படி, அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. போச்சம்பள்ளி சுற்-றுவட்டாரத்தில், 'மா' விவசாயிகள், மாற்று விவசாயத்திற்கு மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இழப்பீடு மற்றும் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. மாங்காய்க்கு, அரசே விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே, விவசாயிகளை காக்க முடியும். மேலும், 'மா' விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் வாங்கிய பயிர்கடன் உள்ளிட்ட அனைத்து விவ-சாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். கர்நாடகாவில் மேக-தாது அணை கட்டக்கூடாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும், என்பன உள்-ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க நிர்வாகிகள் மூர்த்தி, அருண்ராஜ், அன்பு, இளமதி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us