கிருஷ்ணகிரியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி
கிருஷ்ணகிரியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி
ADDED : ஜூலை 05, 2026 11:15 PM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: சூளகிரியைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியைச் சேர்ந்த முரளி உட்பட மூன்று பேர், ஐந்து ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தினர்.
ஆரம்பத்தில் முறையாக சீட்டு பணத்தை திருப்பி கொடுத்ததால், அதை நம்பி, சூளகிரி, ஓசூர், பெங்களூரு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 1,600-க்கும் மேற்பட்டோர் மற்றும் அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
ஆனால், சில ஆண்டுகளாக சீட்டு பணத்தை திருப்பி தராமல், 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். சீட்டு பணத்தை திருப்பி கேட்டபோது, தர முடியாது எனக்கூறி, மிரட்டல் விடுத்தனர். மோசடி நபர்களை கைது செய்து, எங்கள் பணத்தை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
