/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா
/
அதியமான் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : டிச 09, 2025 05:42 AM

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் ஆண்டுதோறும் நடக்கும் விளையாட்டு தினவிழா, பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் திருமால் முருகன் இவ்விழாவை துவக்கி வைத்து, விளையாட்டு தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மாணவர்களிடையே பேசினார்.
மேலும் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் சோபா பேசினார். பள்ளி முதல்வர் லீனா ஜோஸ் வரவேற்றார். மாணவர்கள் வண்ணக்கொடிகளுடன் அணிவகுப்பு நடத்தினர். அதன் பின்னர் பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ, -மாணவியருக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

