/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க செயற்குழு
/
தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க செயற்குழு
ADDED : மார் 15, 2024 02:37 AM
கிருஷ்ணகிரி:பையூரில்,
தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க, கிழக்கு மாவட்ட செயற்குழு
கூட்டம் நடந்தது. சங்க நிறுவனரும், மாநில தலைவருமான கிருஷ்ணன் தலைமை
வகித்தார்.
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பருவ மழை
பொய்த்து போனதால், மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாம்பூக்கள் கருகி உதிர்ந்து வருகிறது. எனவே, மா விவசாயிகளுக்கு ஒரு
ஏக்கருக்கு, 30,000 ரூபாய் நஷ்டஈடு வழங்க, தமிழக அரசை
கேட்டுக்கொள்வது. விவசாயிகள் நலன் காக்காத மத்திய அரசிற்கு, வரும்
லோக்சபா தேர்தலில், விவசாயிகள் ஒன்றிணைந்து சரியான பாடத்தை புகட்ட
வேண்டும் என, விவசாயிகளை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணை அமைப்பாளர் கோணப்பன்,
பொருளாளர் சதாசிவன், மேற்கு மாவட்ட தலைவர் சித்தலிங்கப்பா உள்பட பலர்
பங்கேற்றனர்.

