/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது
/
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது
ADDED : மார் 15, 2024 02:39 AM
ஓசூர்:ஓசூர்
சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீட்டின் கதவுகளை உடைத்து
திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன.
இது குறித்து விசாரிக்க ஓசூர்
டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு,
போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று பூட்டிய வீடுகள் அருகில் நின்ற
இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள்,
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த ராகுல் சுபாஷ், 22,
உதயேந்மதிரத்தை சேர்ந்த பூபாலன், 20 மற்றும் முஸ்லிம்பூரை சேர்ந்த
அஸ்கர் அலி, 27 என தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார்,
அவர்களிடமிருந்து, டூவீலர், தங்க, வெள்ளி நகைகள், 'டிவி'
உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

