தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கே.ஆர்.பி., அணைக்கு மழையின்றி நீர்வரத்து சரிவு

கே.ஆர்.பி., அணைக்கு மழையின்றி நீர்வரத்து சரிவு

கே.ஆர்.பி., அணைக்கு மழையின்றி நீர்வரத்து சரிவு


ADDED : ஜூலை 03, 2026 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, மாவட்-டத்தில் மழையின்றி, கடுமையான வெயில் வாட்டி வருவதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், நீர்நிலைகளில் வேகமாக தண்ணீர் ஆவியாகி வருகிறது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த மாதம், 27ம் தேதி நீர்வரத்து வினாடிக்கு, 699 கன அடியாக இருந்த நிலையில், படிப்-படியாக குறைந்து நேற்று முன்தினம், 534 கன அடியாகவும், நேற்று, 474 கன அடியாகவும் சரிந்தது. அணையிலிருந்து நேற்று, 534 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில், 49.75 அடியாக இருந்தது. முதல்-போக சாகுபடிக்கு கே.ஆர்.பி., அணையிலிருந்து விரைவில் தண்ணீர் திறக்க உள்ள நிலையில், மழையின்றி அணைக்கு நீர்வ-ரத்து சரிந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us