/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் மாநில அளவிலான கபடி போட்டி 8,000 பேர் அமர கேலரி அமைக்கும் பணி
/
ஓசூரில் மாநில அளவிலான கபடி போட்டி 8,000 பேர் அமர கேலரி அமைக்கும் பணி
ஓசூரில் மாநில அளவிலான கபடி போட்டி 8,000 பேர் அமர கேலரி அமைக்கும் பணி
ஓசூரில் மாநில அளவிலான கபடி போட்டி 8,000 பேர் அமர கேலரி அமைக்கும் பணி
ADDED : நவ 15, 2025 02:06 AM
ஓசூர்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா வரும், 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஓசூரில் உள்ள தளி சாலையில், வரும், 28 முதல், 30ம் தேதி வரை, 3 நாட்கள் ஆண் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடக்க உள்ளது. மொத்தம், 40 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அணிகள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ளன. ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக, 1.50 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 1 லட்சம் ரூபாய், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசாக, 50,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. பெண்கள் பிரிவில், முதல் இரு இடங்களை பெறும் அணிகளுக்கு தலா, 50,000 ரூபாய் வழங்கப்-பட உள்ளன.இந்த மாநில அளவிலான போட்டி மூலம், தேசிய அளவிலான கபடி போட்டிக்கு, தமிழக அணிக்கு, 20 வீரர்கள் தேர்வு செய்யப்-பட உள்ளனர். போட்டியை மொத்தம், 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில், கேலரி அமைக்கப்பட
உள்ளது.
இப்பணியை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், பொருளாளர் சுகுமாரன், மாநில கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்-லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

