ADDED : ஜூலை 04, 2026 04:43 AM
கிருஷ்ணகிரி; நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கூலித் தொழி-லாளி, காணாமல் போன நிலையில், நேற்று சட-லமாக மீட்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த பாளேத்தோட்டம் பஞ்., மூக்கம்பட்டியை சேர்ந்-தவர் சரவணன், 44, கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரவணன் கேரள மாநி-லத்தில் கூலி வேலை செய்து வந்தார். இவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்-குகள் உள்ளன. இது சம்பந்தமாக கடந்த ஜூன், 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளார். ஆனால், அன்று முதல் இவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இவரது மனைவி மற்றும் உறவினர்கள் சரவணனை பல இடங்-களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை, மத்துார் அடுத்த மாதம்பதி அருகே உள்ள சிலம்பம்காடு பகு-தியில், கருவேல மரத்தில் துாக்கிட்டு, அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக மத்துார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், மூக்கம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பது தெரிந்தது.மத்துார் போலீசார் வழக்கு பதிந்து கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.
