தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்து தினசரி மார்க்கெட்டில் தினமும் அவதி

குன்றத்து தினசரி மார்க்கெட்டில் தினமும் அவதி

குன்றத்து தினசரி மார்க்கெட்டில் தினமும் அவதி


ADDED : ஜூலை 06, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 05:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி தினசரி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளின்றி பொதுமக்களும், வியாபாரிகளும் அவதி அடைகின்றனர்.

அனைத்து காய்கறிகள் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கணேசன், செயலாளர் பெருமாள், பொருளாளர் கேசவன் கூறியதாவது: கடைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி, மார்க்கெட்டில் கழிப்பறை, குடிநீர் வசதி செய்து தரவில்லை. மேற்பகுதியில் பல இடங்கள் சேதம் அடைந்து மழைநீர் ஒழுகிறது. மார்க்கெட்டை சீரமைக்க நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி, கழிப்பறையை இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிவலம் பாதைகளிலும் நகரின் முக்கிய ரோட்டோரங்களிலும் அனுமதி இன்றி பலர் காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும்.

மேம்பாலம் கட்டப்பட்டதிலிருந்து மார்க்கெட் அருகே உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் வருவதில்லை. 15 ஆண்டுகளாக சுரங்கப்பாதை அமைக்கப்படாமல் உள்ளது. பொது மக்களின் வருகை குறைந்து வியாபாரம் குறைந்துவிட்டது. சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை தேவை என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us