தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆர்.டி.ஓ., அலுவலக பணிகளில் அதிகரிக்கும் சிக்கல்: அலுவலர் நியமனத்தை உடனே செய்யுமா அரசு

ஆர்.டி.ஓ., அலுவலக பணிகளில் அதிகரிக்கும் சிக்கல்: அலுவலர் நியமனத்தை உடனே செய்யுமா அரசு

ஆர்.டி.ஓ., அலுவலக பணிகளில் அதிகரிக்கும் சிக்கல்: அலுவலர் நியமனத்தை உடனே செய்யுமா அரசு


UPDATED : ஜூலை 26, 2026 05:29 PM

ADDED : ஜூலை 26, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 05:29 PM ADDED : ஜூலை 26, 2026 04:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) அலுவலர்கள் பற்றாக்குறையால் வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணிகளில் நாளுக்கு நாள் சிக்கல் அதிகரிக்கிறது.

மதுரையில் வடக்கு, தெற்கு, மத்தி என 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்களும், மேலுார், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் யூனிட் அலுவலகங்களும் செயல்படுகின்றன. இங்குள்ள அலுவலகங்களுக்கு தினமும் வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம், தகுதிச் சான்று உட்பட வாகனம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அதற்கேற்ற எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லை.

மூன்று அலுவலகங்களிலும் தலா ஒரு வாகன ஆய்வாளரே உள்ளனர். இவர்களை வைத்து சமாளிக்க முடியாமல் ஆர்.டி.ஓ.,க்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். அலுவலர்கள் இல்லாததால் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிம சோதனை நடத்துகின்றனர்.

இந்நாட்களிலும் ஓட்டுனர் பள்ளிகள், தனிநபர்கள் என விண்ணப்பித்தல், அவர்களுக்கு சோதனை நேரம் (ஸ்லாட்) ஒதுக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அதிகாலை, இரவு நேரங்களில் கூட சில நிமிடங்களே ஆன்லைன் திறக்கப்படுகிறது.

கட்டணம் செலுத்தியவர்கள், இந்நேரத்தை எதிர்பார்த்து விண்ணப்பிப்பதற்குள் பாடாய்படுகின்றனர். அதையும் சமாளித்து விண்ணப்பித்தால் ஸ்லாட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அதிகாரிகள் புலம்புகின்றனர்.

அரசும் பல ஆண்டுகளாக இத்துறையின் அவலத்தை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. கணிசமான வருவாய் பெற்றுத் தரும் இந்த துறையில் பணிநியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பலநுாறு பேர், வழக்கு காரணமாக நியமனம் பெற முடியாமல் உள்ளனர். அவர்களை உடனே நியமித்து அலுவலர் பற்றாக்குறையை தீர்த்து, சிக்கல்களுக்கு தீர்வு காண அரசு தீர்வு முன்வரவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us