/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேனி ரோடு உயர்மட்ட பாலம் 'செட்' ஆக வாகனங்கள் அனுமதி
/
தேனி ரோடு உயர்மட்ட பாலம் 'செட்' ஆக வாகனங்கள் அனுமதி
தேனி ரோடு உயர்மட்ட பாலம் 'செட்' ஆக வாகனங்கள் அனுமதி
தேனி ரோடு உயர்மட்ட பாலம் 'செட்' ஆக வாகனங்கள் அனுமதி
ADDED : ஏப் 27, 2024 04:40 AM
மதுரை: மதுரை - தேனி ரோட்டில் பீபீசாவடி முதல் எச்.எம்.எஸ்., காலனி வரை உயர்மட்ட பாலப்பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளது.
இப்பகுதியில் 1.19 கி.மீ., நீளத்திற்கு ரூ.54 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது. தேனி செல்லும் வாகனங்கள் இப்பாலத்தில் செல்வதன் மூலம் மேலக்கால் பிரிவு வரை போக்குவரத்துஎளிதாகும்.
இப்பணிகள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தன. இப்பணிகள் முடிவுக்கு வந்து போக்குவரத்துக்கு பாலம் தயாராக உள்ளது. நேற்று முன்தினம் முதல் பாலத்தில் வாகனங்கள் சென்று வரத்துவங்கியுள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் சத்தமின்றி பாலத்தை திறந்துவிட்டனரோ என்ற கேள்வி எழுந்தது.
நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முருகனிடம் கேட்டபோது, ''பால பணிகள் சமீபத்தில் முடிந்து தார் ஊற்றப்பட்டுள்ளது. பாலம் திறப்பு குறித்து அரசு முடிவெடுக்கும். தற்போது அதில் வாகனங்கள் சென்று வந்தால் ரோடு நன்கு 'செட்' ஆகும் என்பதால் ஒரு முன்னோட்டமாக செல்கின்றன. இன்னும் முறைப்படி திறக்கவில்லை'' என்றார்.

