
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: குருவித்துறையில் பவித்ரன் நினைவுக்குழு நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். வடத்தில் பூட்டப்பட்ட ஒரு காளைக்கு 20 நிமிடமும், அதனை அடக்க 9 வீரர்களும் களம் இறங்கினர். பிடிபட்டால் காளையர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் நாட்டு மாட்டு கன்றுக் குட்டிகள் வழங்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 காளைகளும், வீரர்களும் பங்கேற்றனர். போட்டியின்போது 4 பேர் காயமடைந்தனர். எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், தி.மு.க.,ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

