தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சமுதாயத்திற்கு தொண்டு செய்வதாக பிறப்பு இருக்க வேண்டும் திருச்சி கல்யாணராமன் பேச்சு

 சமுதாயத்திற்கு தொண்டு செய்வதாக பிறப்பு இருக்க வேண்டும் திருச்சி கல்யாணராமன் பேச்சு

 சமுதாயத்திற்கு தொண்டு செய்வதாக பிறப்பு இருக்க வேண்டும் திருச்சி கல்யாணராமன் பேச்சு


ADDED : ஜூலை 07, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: ''நமது பிறப்பு மக்களுக்கு தொண்டு செய்வதாக இருக்க வேண்டும்'' என, மதுரையில் நடந்த பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி யில் திருச்சி கல்யாண ராமன் பேசினார்.

மதுரையில் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில், காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமனின், 'கம்பராமாயண தொடர் பக்தி சொற்பொழிவு' நேற்று தொடங்கியது.

கூடல் நகர், வ.உ.சி., தெரு காஞ்சி மஹா பெரியவர் கிருகத்தில் நடக்கும் சொற்பொழிவில், 'ராம அவதாரம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:

ராமாயணத்தை இயற்றியவர் மகரிஷி அல்ல. ரத்னாகரன் என்ற வேட்டைக்காரர். வான்மீகி அவரது காரணப் பெயர். 17 லட்சம் வருடங்களுக்கு முன், அவரைத் தேடி வந்த நாரதர், அவன் செய்யும் தொழில் பாவம் என்று உணர்த்தினார். அதன்பின் அவர் 24 ஆயிரம் பாட்டுகளாக ராமா யணத்தை எழுதினார்.

9ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர், தனக்கு காய்ந்த நெல்லிக்காயை பிச்சை இட்ட வளுக்காக வேண்டியதால், தங்க நெல்லிக்காய் மழை பெய்தது. ஆனாலும், அவர் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. மக்கள் பக்தி, ஞானத்தோடு இருக்க வேண்டும். மக்களுக்கு தொண்டு செய்ய பிள்ளைகள் பெற்று கொள்ள வேண்டும். பெற்றோருக்கான கடமைகள் செய் வதெல்லாம் அதற்கு அடுத்து தான்.

சமுதாயத்திற்குப் பயன்படும் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு எப்பிறப்பிலும் தீங்கு வராது என்கிறார் வள்ளுவர். நமது பிறப்பு சமு தாயத்திற்கு தொண்டு செய்யவே இருக்க வேண்டும், சுயநலம் கூடாது. அவர் களுக்கே இறைவன் திரு வருள் கிடைக்கும். தாத்தா, அவரது தாத்தா என முன்னோர்கள், குல தெய்வத்தை வணங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கல்யாணராமன் சொற்பொழிவு ஜூலை 19 வரை, தினமும் மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது. இன்று (ஜூலை 7) விசுவாமித்ரன் வேள்வி காத்தல், எனும் தலைப்பில் பேசுகிறார்.

ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார். விவரங் களுக்கு 94426 30815ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us