/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பஸ்சில் காட்சிப் பொருளான போர்டு
/
அரசு பஸ்சில் காட்சிப் பொருளான போர்டு
ADDED : டிச 09, 2025 07:29 AM
பேரையூர்: பேரையூர் வழியாக இயக்கப்படும் அரசு பஸ்களில் முன்புறம் உள்ள டிஜிட்டல் போர்டுகள் காட்சிப் பொருளாக உள்ளதால் அவை செல்லும் இடம் தெரியாமல் பயணிகள் குழம்புகின்றனர்.
சில ஆண்டுகளாக அரசு பஸ்களில் எந்த ஊர் செல்கிறது என தெரிவிக்க டிஜிட்டல் போர்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த போர்டுகள் சரியான பராமரிப்பு இல்லாததால் எழுத்துக்கள் சரிவர தெரிவதில்லை.
போர்டுகள் செயல்படாத பஸ்களில் சில நடத்துனர்கள் பேப்பரில் எழுதி கண்ணாடிகளில் ஒட்டுகின்றனர்.
இதுவும் பயணிகளுக்கு சரியாகத் தெரிவதில்லை. இதனால் பஸ்கள் எந்த ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன எனத் தெரியாமல் பயணிகள் காத்திருக்கும் நிலையும், சிலர் பஸ்களை தவற விடுவதும் தொடர்கிறது.
டிஜிட்டல் போர்டை பராமரித்து அவை சரியாக இயங்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

