/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
மதுரை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : டிச 09, 2025 07:04 AM

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயிலில் மிரட்டல் வந்தது. பின் புரளி என உறுதியானது.
இ-மெயில் கடிதத்திலுள்ள விபரம்: நீதிமன்றத்தில் வெடிபொருட்கள் (6 ஆர்.டி.எக்ஸ்.ஐ.இ.டி.,) வைக்கப்பட்டு உள்ளன. குண்டுவெடிக்கும் முன் நீதிபதிகள், மக்கள் வெளியேறுங்கள். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., பிரதிநிதி முஸ்தபா அலி சையத் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எஸ்., அதிகாரி அருணுக்கு அவரது உண்மையான அடையாளம் தெரியவில்லை. மியால்பூர் 29, 5வது டிரஸ்ட் கிராஸ் தெருவை ஈ.வெ.ரா., அம்பேத்கர் தெரு என மறுபெயரிட விரும்புகிறோம். ஆர்னா அஸ்வின் சேகர் வழக்கில் போக்சோ நீதிமன்றத்தின் சோம்பேறித்தனம், திருப்பரங்குன்றம் தர்காவில் சி.ஐ.ஏ., உளவுத்துறை தலையீடுகளுக்கு குண்டுவெடிப்பு ஒரு பாடமாக இருக்கட்டும். மற்றவர்கள் அழும்போது மட்டுமே ஆர்னாவால் சிரிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். சந்தேகப்படும்படியான பொருட்கள் சிக்கவில்லை. பின் தான் புரளி என உறுதியானது. இதனால் காலையில் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. மதியம் 2:00 மணியிலிருந்து பணிகள் துவங்கின.

