/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மதுரையில் இன்று முதலீட்டாளர் மாநாடு மேலமடை சந்திப்பு மேம்பாலத்தையும் திறந்து வைக்கிறார்

ADDED : டிச 07, 2025 08:55 AM
மதுரை: முதல்வர் ஸ்டாலின் மதுரையில் இன்று (டிச.7) மேலமடை பாலம் திறப்பு, முதலீட்டாளர்கள் மாநாடு, பட்டா வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதற்காக நேற்றிரவு மதுரை வந்தார். இன்று காலை 8:45 மணிக்கு கருப்பாயூரணியில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதைதொடர்ந்து காலை 9:20 மணிக்கு ரூ.150.28 கோடியில் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள் எ.வ. வேலு, மூர்த்தி, தியாகராஜன், எம்.எல்.ஏ., தளபதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பின்னர் ரிங் ரோடு ஐடாஸ் கட்டரில் நடக்கும் 'தமிழகம் வளர்கிறது' எனும் தலைப்பில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். அங்கு அமைச்சர் ராஜா முன்னிலையில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம் ரூ.36 ஆயிரத்து 660.35 கோடி முதலீடுகள் மூலம் 56 ஆயிரத்து 766 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும். மேலுார் சிப்காட் தொழிற்பூங்காவிற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.
இதைதொடர்ந்து உத்தங்குடி கலைஞர் திடலில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். அங்கு ஒரு லட்சம் பேருக்கு பட்டா வழங்கும் திட்டத்தில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்வர் வழங்குகிறார். ரூ.3 ஆயிரத்து 65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். புது பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு மதுரையில் ட்ரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.