/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வரின் மதுரை 'விசிட்' : கரும்பு விவசாயிகள் ஏமாற்றம்; ஆய்வு செய்தும் பலனில்லை

ADDED : டிச 09, 2025 07:14 AM

மேலுார்: மதுரையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க உத்தரவிடாதது கரும்பு விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆலை 1963ல் 138 ஏக்கரில் துவங்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்பட பல மாவட்டங்களில் இருந்து ஆலைக்கு கரும்பு கொண்டு வரப்பட்டது. ஆலை செயல்படுவதன் மூலம் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். இந்நிலையில் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களுக்காக ஆலை மூடப்பட்டது.
கரும்பு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கதிரேசன் கூறியதாவது : சர்க்கரை ஆலையை திறக்க கோரி தொடர்ந்து போராடி வருவதால் முதல்வர் திறக்க உத்தரவிடுவார் என நம்பி இருந்தோம். அவ்வாறு அறிவிக்காதது ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆலையை திறக்க 2022 ஜூனில் வேளாண் அமைச்சர் பன்னீர் செல்வமும், 2025 நவ. 19 ல் தமிழக சர்க்கரை ஆலை இயக்குனர் அன்பழகன் தலைமையிலும் மத்திய அரசு அதிகாரிகள் உள்பட உயர்மட்ட குழுவினர் ஆலையை ஆய்வு செய்தனர்.
விவசாயிகளிடம் இயந்திரங்கள், கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளதாக கூறிச் சென்றனர். இந்தாண்டு ஆலையை திறக்கா விட்டால் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிட்டுள்ள கரும்புகளை தஞ்சாவூர் மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப வேண்டிய அவலம் உள்ளதால் தமிழக அரசு ஆலையை இயக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.