/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலமடை சந்திப்பு பாலத்தை டிச.7ல் திறக்கிறார் முதல்வர்
/
மேலமடை சந்திப்பு பாலத்தை டிச.7ல் திறக்கிறார் முதல்வர்
மேலமடை சந்திப்பு பாலத்தை டிச.7ல் திறக்கிறார் முதல்வர்
மேலமடை சந்திப்பு பாலத்தை டிச.7ல் திறக்கிறார் முதல்வர்
ADDED : நவ 13, 2025 12:34 AM

மதுரை: ''மதுரை மேலமடை சந்திப்பு மேம்பாலத்தை டிச.7 ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்'' என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மேலமடை, கோரிப்பாளையம் சந்திப்புகளில் மேம்பாலப் பணி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் ஆய்வு செய்தார்.
அவருடன் கலெக்டர் பிரவீன்குமார், தளபதி எம்.எல்.ஏ., நெடுஞ் சாலைத்துறை சிறப்பு அலுவலர் சந்திரசேகர், தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் செல்வநம்பி, கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன் உடனிருந்தனர்.
அமைச்சர் கூறியதாவது: மேலமடை, கோரிப்பாளையம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்ட முறையே ரூ.150 கோடி, ரூ.190 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலமடை சந்திப்பு மேம்பாலத்தை டிச.7ல் முதல்வர் திறக்கிறார்.
பாலப் பணிகள் 97 சதவீதம் முடிந்துள்ளது. கோரிப்பாளையம் பாலம் தொடர்பான வழக்கால் 6 மாதம் காலதாமதமானது. பொங்கலுக்குள் இப் பணிகள் முடிந்து விடும் என ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையும் முதல்வரே நேரடியாக திறப்பார்.
புதிய தொழில்நுட்பம் இப்போது சாலை பாதுகாப்பு, பாலம் பாதுகாப்புக்கென தனிப்பிரிவே துவக்கியுள்ளோம். அவர்கள் பாலத்தின் பணிமுடிந்த சான்றிதழ் வழங்கினால்தான் முதல்வர் திறக்க வருவார். கோவையில் நீண்ட பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார். இதில் அமெரிக்காவின் 'ரோலர் கிராஷ் பேரியர்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாகனம் வேகமாக வந்து மோதினாலும் அந்த ரோட்டில்தான் விழச்செய்யும். பாலத்தை தாண்டி வெளியில் செல்லாது.
மதுரை தெற்குவாசல் பகுதி பாலத்திற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். அறிக்கை பெற்றபின் திட்ட அறிக்கை தயாரித்து, முதல்வர் ஒப்புதலுக்குப்பின் பணிகள் துவங்கும். இவ்வாறு கூறினார்.

