/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கும்பாபிஷேக பணிகளை முறையாக நடத்துங்க...
/
கும்பாபிஷேக பணிகளை முறையாக நடத்துங்க...
ADDED : டிச 02, 2025 05:00 AM

மதுரை: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில்கும்பாபிஷேக பணிகளைமுறையாக நடத்தக்கோரி ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநில துணைத் தலைவர் சுந்தரவடிவேல் வலியுறுத்தினார்.
அவர் தெரிவித்ததாவது: கோயில் சுற்றுச் சுவரின் தெற்கு பகுதி சிதிலமடைந்து, மரங்கள் வளர்ந்துள்ளன.
சுவர் பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர், அபிஷேக நீர் வெளியேறும் கால்வாய், அடுத்த கும்பாபிஷேகம் வரை சீர்கெடாமல் இருக்கும் வகையில் பணி மேற்கொள்ள வேண்டும்.
வளாகத்தில் கேட்பாரற்று கிடக்கும் நந்தி சிலைகளை உரிய இடத்தில் நிறுவ வேண்டும். படிகளில் உள்ள சிதைந்த பகுதி, கிரானைட் கல் உடைந்த பகுதிகள் சரிசெய்யப்படாமல் உள்ளன. கோயில் சீரமைப்பு பணிகளைமுறையாக செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றார்.

