/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யூரியா பற்றாக்குறையை தவிரக்க இனி விவசாயிகளுக்கு ஆதார் ஆதாரம்; தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க மத்திய அரசு கிடுக்கிப்பிடி
/
யூரியா பற்றாக்குறையை தவிரக்க இனி விவசாயிகளுக்கு ஆதார் ஆதாரம்; தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க மத்திய அரசு கிடுக்கிப்பிடி
யூரியா பற்றாக்குறையை தவிரக்க இனி விவசாயிகளுக்கு ஆதார் ஆதாரம்; தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க மத்திய அரசு கிடுக்கிப்பிடி
யூரியா பற்றாக்குறையை தவிரக்க இனி விவசாயிகளுக்கு ஆதார் ஆதாரம்; தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க மத்திய அரசு கிடுக்கிப்பிடி
ADDED : டிச 02, 2025 05:55 AM

மதுரை: யூரியா பற்றாக்குறை, கூடுதல் பயன்பாட்டை தவிர்க்க விவசாயிகளுக்கு ஆதார் எண் இன்றி மானிய விலையில் யூரியா உரம் வழங்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நவம்பர் சம்பா பருவத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, வாடிப்பட்டி, அலங்காநல்லுார், சோழவந்தான் உட்பட பகுதிகளில் 42 ஆயிரத்து 544 எக்டேர் பரப்பளவில் இருபோக சாகுபடியின் 2ம் போகத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 45 கிலோ மூடை வீதம் அதிகபட்சமாக 2 மூடை (90 கிலோ அளவு) தேவைப்படும்.
நிறைய விவசாயிகள் இந்த அளவைத் தாண்டி கூடுதலாக யூரியா உரமிடுகின்றனர். அதிகளவு ரசாயன உர பயன்பாட்டால் மண்ணின் கரிமச்சத்து குறைந்து மண்வளம் குறைகிறது. ஒரு மூடை உரம் தயாரிக்க ரூ.2500 வரை செலவாகும் நிலையில் மத்திய அரசு மூடைக்கு ரூ.266 மட்டுமே விலை வைத்துள்ளது. வீணாக மண்ணில் இடும் யூரியாவை குறைத்தால் உர உற்பத்தி, மானியச் செலவும் குறையும். இதை வலியுறுத்தும் வகையில் டிச. 1 முதல், விவசாயிகள் யூரியா வாங்கினால் ஆதார் எண்ணுடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
கூட்டுறவுத்துறையின் கீழ் மதுரையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் யூரியா உட்பட அனைத்து வகை மானிய உரங்களும் விற்கப்படுகின்றன. அந்தந்த கடைகள் அல்லது கடன் சங்கங்களில் விவசாயிகள் வாடிக்கையாக உரம் வாங்கினாலும் ஆதார் எண் இன்றி இனி உரம் வாங்க முடியாது என்கின்றனர் வேளாண் துறை அதிகாரிகள்.
அவர்கள் கூறியதாவது: ஒருமுறை ஆதார் எண் பதிந்து யூரியா உரம் வாங்கி விட்டால் அந்த சீசனுக்கு கூடுதலாக யூரியா வாங்க முடியாது. ஆதார் எண்ணுடன் 'பி.ஓ.எஸ்.,' இயந்திரத்தில் பதிவு செய்யும் போது தான் உரம் இருப்பு கழிந்து கொண்டே வரும். இதை பின்பற்றாத இரு கடைகளின் லைசென்ஸை தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். விவசாயிகளும் உரம் வாங்க வரும் போது ஆதார் எண்ணுடன் வர வேண்டும். இல்லாவிட்டால் உரம் கிடைக்காது'' என்றனர்.
தனியார் உரக்கடை உரிமையாளர்கள் கூறுகையில் 'நவம்பருக்கான யூரியா உரம் தற்போது தான் கிடைத்தது. யூரியா இருந்தால் தான் பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி., உரங்களையும் மானிய விலையில் விவசாயிகள் சேர்த்து வாங்குவர். எனவே தாமதமின்றி யூரியா வழங்க வேளாண் துறை முன்வரவேண்டும்' என்றனர்.

