/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் ஹிந்து அமைப்பினர் கொண்டாட்டம்
/
குன்றத்தில் ஹிந்து அமைப்பினர் கொண்டாட்டம்
ADDED : டிச 02, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து குன்றத்தில் ஹிந்து அமைப்பினர் வெடிகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சக்திவேல், சித்தன், பா.ஜ., மாநில இளைஞரணி துணைத் தலைவர் வெற்றிவேல் முருகன், தமிழக ஹிந்து மகாசபா நிறுவனர் ராஜா மற்றும் நிர்வாகிகள் 16 கால் மண்டபம், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் வெடிகள் வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

