ADDED : டிச 09, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தானில் புதிய சார்பதிவாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலக கூடுதல் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இங்கு பஸ்ஸ்டாண்ட் அருகே ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகம், பழைய பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.53 லட்சத்தில் கூடுதலாக மேல் தளம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. துணை பதிவுத்துறை தலைவர் ஆனந்த், மாவட்ட பதிவாளர்கள் செந்தில்குமார், விஜயசாந்தி, சார்பதிவாளர் திருப்பதி, பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்யபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

