ADDED : பிப் 11, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவாக அலங்காநல்லுார் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கில் இன்றும் (பிப்.11) நாளையும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இன்று மேற்கு, வடக்கு, திருப்பாலை, ஆனையூர் பகுதி காளைகளும், நாளை கிழக்கு, வடக்கு தெற்கு, வண்டியூர் பகுதி காளைகளும் பங்கேற்கின்றன.
உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பொது மக்கள், கட்சியினர் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

