/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய், கால்வாயை பாதுகாக்க குழு: குன்றத்து விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கண்மாய், கால்வாயை பாதுகாக்க குழு: குன்றத்து விவசாயிகள் எதிர்பார்ப்பு
கண்மாய், கால்வாயை பாதுகாக்க குழு: குன்றத்து விவசாயிகள் எதிர்பார்ப்பு
கண்மாய், கால்வாயை பாதுகாக்க குழு: குன்றத்து விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 09, 2025 06:54 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே தென்கால், பானாங்குளம், சேமட்டான், செவ்வந்தி குளம், ஆரியங்குளம், நிலையூர் பெரிய கண்மாய்கள் உள்ளன. தோப்பூர், வேடர் புளியங்குளம், சாக்கிலி பட்டி, தென்பழஞ்சி உள்ளிட்ட மானாவாரி கண்மாய்களும் உள்ளன. இக்கண்மாய்கள் மூலம் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுவதுடன், அப்பகுதி குடிநீர் ஆதாரமாகவும் உள்ளன.
கண்காணிப்புக்குழு தேவை வைகை அணையில் திறக்கும் தண்ணீர் திருப்பரங்குன்றம் கண்மாய் களுக்கு நிலையூர் கால்வாய் வழியாக சென்று நிரம்பும். இக்கண்மாய்களுக்கு சமீபத்தில் வைகை அணை தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சிறிய கண்மாய்கள் நிரம்பின. தென்கால், நிலையூர் பெரிய கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.
கண்மாய், நீர்வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறும், ஆக்கிரமித்தால் உடனுக்குடன் அகற்றவும், கண்மாய் தண்ணீரை விவசாயத்திற்கு மட்டும் திறக்கவும், மீதியை பாதுகாப்பதும் அவசியம். சாகுபடி இல்லாத காலங்களில் ஆக்கிர மிப்பாளர்கள், மீன்பிடிப்பதற்காக கண்மாய் தண்ணீரை திறந்து விடுவதை தடுக்க வேண்டும்.
கண்மாய்களுக்கு தண்ணீர் வருவது, வெளியேறுவதை கண்காணிக்க வேண்டும். கரையோரம் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்கவும், கால்வாய்களில் சேதம் ஏற் பட்டால் உடனே சீரமைக்கவும் நடவடிக்கை தேவை.
நீர்வளத் துறை, போலீசார், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பாசன விவசாய சங்க நிர்வாகிகள் அடங்கிய குழு அமைத்து தினமும் இவற்றை கண் காணிக்க வேண்டும்.
அப்போதுதான் ஆண்டு முழுவதும் சாகுபடி பணிகள் நடக்கும், விவசாயம் செழிக்கும் விவ சாயிகளின் வாழ்வாதாரம் உயரும். நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

