/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு
/
திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு
திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு
திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு
ADDED : டிச 09, 2025 07:24 AM

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த பிரச்னையில், உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்ததுடன், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, மனுக்கள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் பொதுமக்கள் சார்பில் இன்று (டிச.9) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சன்னதித் தெருவில் உள்ள மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதம் இருக்க போலீசில் அனுமதி கோரினர். மனுவை பரிசீலித்த உதவி கமிஷனர் சசிப்பிரியா உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவில், கார்த்திகை மாதத்தையொட்டி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றன். இந்த இடம் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கப்படாத பகுதி. இங்கு அனுமதிக்கும் பட்சத்தில் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்போராட்டத்தில் பங்கேற்போர் எண்ணிக்கை, வாகனம் நிறுத்துமிட விவரங்களை சமர்ப்பிக்காததாலும், தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதாலும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும், 26.11.25 முதல் 11.12.25 வரை மதுரை நகரில் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை உத்தரவு உள்ளதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.

