/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயிர்களை பாழ்படுத்தும் பன்றிகள்; சாகுபடியை காப்பாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : டிச 02, 2025 04:26 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் தொட்டியபட்டி, பெரிய ஆலங்குளம், ஓ.ஆலங்குளம், கொம்பாடி, நெடுமதுரை பகுதிகளில் பன்றிகள் பயிர்களை பாழ்படுத்துவ தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அப்பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை, பயறு வகைகள், சோளம், காய்கறிகள், கடலை, வெங்காயம், உளுந்து பயிரிட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் கூட்டமாக வரும் பன்றிகள் அப்பயிர்களை பாழ்படுத்தி வருகின்றன.
விவசாயிகள் கொப்பையா, சந்திரசேகர், பழனிவேல், பெருமாள், அழகர், முத்துக்குமார், வேல் கண்ணன் கூறியதாவது:
இரவு நேரங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டம் கூட்டமாக வயல்களுக்குள் வருகின்றன.
பயிர்களை அழிப்பதுடன் வேர்களையும் தோண்டிப் போட்டுவிடுகின்றன.
மூன்று அடி ஆழம் தோண்டி விட்டு ஓடுகின்றன. காவலுக்கு இருக்கும் விவசாயிகள் விரட்டினால் கடிக்க வருகின்றன.
கண்மாய் கருவேல மரங்களின் அடியில் ஏராளமான பன்றிகள் வசிக்கின்றன.
அவற்றின் தொந்தரவால் விவசாயம் செய்ய முடியவில்லை. தொடர்ந்து நஷ்டம் அடைகிறோம். விவசாயிகளில் பலர் 9 ஆண்டுகளாக விவசாயத்தை தவிர்த்து வருகின்றனர்.
பன்றிகளை பிடித்து காட்டுப் பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை எனில் பயிர்கள் அழிந்து, விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்றனர்.