தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முதலில் உங்களை பற்றிய செய்திகளை படியுங்கள்; முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

முதலில் உங்களை பற்றிய செய்திகளை படியுங்கள்; முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

முதலில் உங்களை பற்றிய செய்திகளை படியுங்கள்; முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

36


UPDATED : ஜூன் 17, 2026 01:28 PM

ADDED : ஜூன் 17, 2026 11:37 AM

Follow on GoogleFavourite on Google

36

UPDATED : ஜூன் 17, 2026 01:28 PM ADDED : ஜூன் 17, 2026 11:37 AM


36
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: முதலில் உங்களை பற்றிய செய்திகளை படிக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை வானகரத்தில் திமுக எம்பி இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:ஒரு மாநில கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக விளங்கி கொண்டு இருக்கிறது. ஒரு தேர்தல் தோல்விக்கே, இன்றைக்கு பல கட்சிகள் காணாமல் போய்விடுகிறது. ஆனால் 75 வருடமாக கொள்கைக்காக, லட்சியத்துக்காக திமுக பாடுபட்டு கொண்டு இருக்கிறது.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக மக்களுக்காக பாடுபட்டுகொண்டு இருக்கிறது. இன்றைக்கு நடக்கும் ஆட்சியை பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒன்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். சோஷியல் மீடியோ இன்றைக்கு எந்த அளவுக்கு பரவிக்கொண்டு இருக்கிறது என்பது எல்லாம் உங்களுக்கு தெரியும்.

கோட்சூட் போட்டு, டிபன் எடுத்துக்கொண்டு வாட்ச் கட்டி வந்தார், செஸ் விளையாடினார், இன்றைக்கு கோட் போடவில்லை என சோஷியல் மீடியாவில் வந்த செய்திகள் மறைந்து, இன்று நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் குறித்த செய்திகள் வருகின்றன.

நான் வேண்டுகோள் வைப்பது எல்லாம், இன்றைக்கு தமிழகத்தில் முதல்வராக இருப்பவரை பற்றி நான் கேட்பது எல்லாம், தயவு செய்து இன்றைக்கு உங்களை பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளை படியுங்கள், படித்து அதில் இருக்கும் உண்மையை கண்டுபிடியுங்கள், அதுக்கு உரிய நடவடிக்கை எடுங்கள் என்பது தான் என்னுடைய அன்பான வேண்டுகோள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சிறப்பு வீடியோ!

திருமண விழாவில் முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த அறிவுரை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us