ADDED : நவ 14, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிக நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் நாராயணசாமி நெல் உற்பத்தித்திறன் விருது, ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பின்பற்றும் விவசாயிகள், பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 2 ஏக்கர் சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்தில் அரசு அங்கீகரித்த சன்ன ரகத்தை சாகுபடி செய்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, பட்டா, சிட்டா, அடங்கலுடன் நுழைவுக்கட்டணம் ரூ.150 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

