ADDED : நவ 14, 2025 04:41 AM
வகுப்பறைகள் திறப்பு மதுரை: கரையிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டம், ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு நிதியுதவியுடன் ரூ.26 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது. வைகை குழுமத் தலைவர் நீதி மோகன், ஆனைமலைஸ் குழும தலைவர் ரகுராம் தலைமை வகித்தனர். ரவுண்ட் டேபிள் இந்தியா தலைவர் ராமுஅங்கப்பன் முன்னிலை வகித்தார். நிர்வாகி ரிஷ்வந்த் ஜெயராஜ், தலைமையாசிரியர் தவமணி, ஊராட்சி தலைவர் சின்னையா, முன்னாள் தலைவர் சந்தோஷ், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.
கல்லுாரிக்கு விருது மதுரை: மும்பை ஐ.ஐ.டி.,யின் போஸ்ஸி புவியியல் தகவல் அமைப்பு திட்டம் சார்பில் லேடி டோக் கல்லுாரி மையத்தை 'கட்டற்ற மென்பொருள் புவிசார் அறிவு மையமாக' அறிவிக்கப்பட்டது. அதற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. விருது அங்கீகாரச் சான்றிதழை கலெக்டர் பிரவின்குமார், கல்லுாரி முதல்வர் பியுலா ஜெயஸ்ரீயிடம் வழங்கினார். புவியியல் தகவல் அமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம் கான், கல்லுாரி மைய ஒருங்கிணைப்பாளர் பத்மஜா, தகவல் அமைப்பு நிபுணர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட சதுரங்க போட்டி மதுரை: புதுார் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் குழந்தைகளுக்கான சதுரங்க போட்டிகள் நடந்தன. 8 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. தலைமையாசிரியர் ேஷக் நபி தலைமை வகித்தார். 70 பள்ளிகளில் இருந்து 244 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சாணக்கியா செஸ் அகாடமி தலைவர் சாந்தி, செயலாளர் சுதாகரன், ஆசிரியர்கள் ஹபீபுல் அமீன், முகமது இப்ராஹிம், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

