/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சீசன் துவக்கம்; பனங்கிழங்கு விற்பனை ஜோர்
/
சீசன் துவக்கம்; பனங்கிழங்கு விற்பனை ஜோர்
ADDED : டிச 09, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர், மேலப்பட்டி, சந்தையூர், கீழப்பட்டி, லட்சுமிபுரம் விவசாயிகள் பனை மரங்களில் இருந்து விழும் பனம்பழங்களை 2 மாதங்களுக்கு முன்னர் சேகரித்த னர். இப்பழத்திலிருந்து நுாற்றுக்கணக்கான கொட்டைகளை பிரித்து மண் கொட்டி மூடி வைக்கின்றனர்.
இதை அப்படியே 2 மாதங்கள் வரை அவ்வப் போது நீர்விட்டு பின்னர் குருத்து வெளியே தெரிந்ததும் தோண்டி எடுக்கும்போது பனங்கிழங்கு கிடைக்கிறது. மண்ணுக்குள் இருக்கும் பனங்கிழங்குகளை துாய்மைப்படுத்துகின்றனர். இந்த கிழங்குகளை 10 எண்ணிக்கையில் கட்டாக கட்டி ரூ.50க்கு விற்கின்றனர்.

