/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்க்கரை ஆலையை இயக்க கரும்பு விவசாயிகள் பிரசாரம்
/
சர்க்கரை ஆலையை இயக்க கரும்பு விவசாயிகள் பிரசாரம்
சர்க்கரை ஆலையை இயக்க கரும்பு விவசாயிகள் பிரசாரம்
சர்க்கரை ஆலையை இயக்க கரும்பு விவசாயிகள் பிரசாரம்
ADDED : நவ 14, 2025 04:35 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே இயக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை நடத்தினர்.
கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர்கள் கதிரேசன், அய்யாவு, சேகர், ராஜாமணி, தனசேகரன், அடக்கிவீரன் பங்கேற்றனர்.
விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் ஆலையை திறக்க வேண்டும். ஆலையை இயக்கும்படி கரும்பு விவசாயிகள் 46 நாள் காத்திருப்பு போராட்டம், அலங்காநல்லுார் முதல் கலெக்டர் அலுவலகம் வரை நடைபயணம், போராட்டம் நடத்தியும் கரும்பாலையை திறக்காதது, ஆலையில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மூர்த்தி கூட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.
எனவே முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். நடவடிக்கை இல்லையென்றால், விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.

