/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிங்கப்பூரில் துணை மேலாளர் பதவி எனக்கூறி கழிப்பறை கழுவும் பணி மதுரையில் பலே மோசடி

ADDED : நவ 15, 2025 01:35 AM
மதுரை: மதுரை, காமராஜர்புரம் வெங்கடேஷ் பாபு, 39; இவர், ஏஜன்டுகள் மூலம் மதுரை நரிமேடு ஸ்ரீகுழந்தை ஆனந்தர் ஆன்லைன் டிரேடு நிறுவனத்தை அணுகினார்.
அதன் உரிமையாளர் சாந்தகுமாரி, 'சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் துணைமேலாளர் பதவி உள்ளது, அதற்கு ஏற்பாடு செய்துள்ளேன்' எனக்கூறினார்.
இதை நம்பி, சாந்தகுமாரிக்கும், ஏஜன்டுகள் பழனிகுமார், உமாதேவி, ஜெயமீனா ஆகியோருக்கும் மொத்தம், 3.73 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
சிங்கப்பூருக்கு வெங்கடேஷ்பாபு சென்றார். அவரிடம் விசாவில் இருந்த வேலையில் சேர உள்ள நிறுவனத்தின் முகவரிக்கு சென்றபோது, அது ஹோட்டல் எனத்தெரிந்தது.
அதிர்ச்சியடைந்தவர், ஹோட்டல் நிர்வாகத்திடம் விசாரித்தபோது, 'உங்களை பாத்திரம், கழிப்பறை கழுவும் வேலைக்குதான் அழைத்திருந்தோம்' எனக்கூறி, மேலும் அதிர்ச்சியடைய செய்தனர்.
இந்தியா திரும்பிய வெங்கடேஷ்பாபு, மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
சாந்தகுமாரி உட்பட 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.