தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பல்கலை தினக்கூலி பணியாளர்கள் பணிநிரந்தரம் கோரி போர்க்கொடி: சம்பள உயர்வும் கிடைக்கல என புகார்

பல்கலை தினக்கூலி பணியாளர்கள் பணிநிரந்தரம் கோரி போர்க்கொடி: சம்பள உயர்வும் கிடைக்கல என புகார்

பல்கலை தினக்கூலி பணியாளர்கள் பணிநிரந்தரம் கோரி போர்க்கொடி: சம்பள உயர்வும் கிடைக்கல என புகார்


UPDATED : நவ 05, 2026 11:55 PM

ADDED : நவ 04, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:55 PM ADDED : நவ 04, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் தினக்கூலி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

இப்பல்கலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நுாற்றுக்கணக்கான தினக்கூலி பணியாளர் பணியில் உள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.500 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2006ல் பல்கலை சிண்டிகேட் தீர்மானம் அடிப்படையில் 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றிய 136 பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி., மூலம் பணி நியமனம் நடப்பதால் 167 பேரை தற்போது வரை நிரந்தரம் செய்யவில்லை.

பல்கலை தினக்கூலி பணியாளர் சங்க தலைவர் கருப்பையா, செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது 167 பேர் பணியில் உள்ளனர். 40, 50 வயதை கடந்துவிட்டனர். டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடைமுறைக்கு வரும்முன் பல்கலை சிண்டிகேட் மூலம் தினக்கூலி பணியாளர் நிரந்தரம் செய்யப்பட்டனர். அதை பின்பற்றி மீதமுள்ளோரையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசு அனுமதித்த சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.630. ஆனால் பழைய சம்பளம் அடிப்படையில் ரூ.500 தான் வழங்கப்படுகிறது. 30 ஆண்டுக்கு மேலாக பணியாற்றுவோருக்கு கூட பி.எப்., பிடித்தம், இ.எஸ்.ஐ., உரிமை இல்லை. நிர்வாக ஒத்துழைப்பும் இல்லை. போராட்டம் நடத்தும் மனநிலையில் உள்ளோம். அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை இல்லை. முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us