/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோரிப்பாளையத்தில் இரவில் வாகன போக்குவரத்துக்கு தடை
/
கோரிப்பாளையத்தில் இரவில் வாகன போக்குவரத்துக்கு தடை
கோரிப்பாளையத்தில் இரவில் வாகன போக்குவரத்துக்கு தடை
கோரிப்பாளையத்தில் இரவில் வாகன போக்குவரத்துக்கு தடை
ADDED : நவ 14, 2025 04:33 AM
மதுரை: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் புதிய பாலம் கட்டுமானப்பணியின் ஒருபகுதியாக தமுக்கம் சந்திப்பில் இருந்து ஏ.வி. பாலம் வரை உள்ள பில்லர்களில் கர்டர் பீம் அமைக்கும் பணி நேற்றுமுன்தினம் துவங்கியது. ஒருவாரத்திற்கு தினமும் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை இப்பணி நடக்கும்.
இதனால் இந்நேரத்தில் மட்டும் எம்.எம். லாட்ஜ் சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு மற்றும் மீனாட்சி கல்லுாரி தரைப்பாலம் சந்திப்பில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்பிற்கு செல்ல எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை.
எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக அண்ணா பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள் எம்.எம்.லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, எப்.எப்., ரோடு, ஓ.சி.பி.எம்., பள்ளி சந்திப்பு, கோகலே ரோடு, அவுட்போஸ்ட், சட்டக்கல்லுாரி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
டூவீலர்கள், இலகுரக வாகனங்கள் தமுக்கம் சந்திப்பு, காந்தி மியூசியம் வழியாக செல்லலாம்.
பெரியார், ஆரப்பாளையம் செல்லும் டவுன் பஸ்கள் இவ்வழியாக அரசு மருத்துவமனை, சிவசண்முகம் பிள்ளை ரோடு, வைகை வடகரை சாலை சென்று ஓபுளா படித்துறை பாலம் வழியாக செல்ல வேண்டும்.
மேலுார் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் கோரிப்பாளையம் செல்லாமல், கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை, காம ராஜர் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

