ADDED : ஆக 25, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: அலங்காநத்தம் பிரி வில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்கள் சேதமாகி உள்ள தால், விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.
எருமப்பட்டி யூனி யன், அலங்காநத்தம் பிரிவு ரோட்டில், 100க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு தேவை யான குடிநீர், காவிரி ஆற் றில் இருந்து கொண்டு வரப்பட்டு, இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி, அதன் பின் குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப் பட்டு வருகிறது.
இந்த குடிநீர் தொட்டி கடந்த, 1998ல் கட்டப் பட்டது என்பதால், இந்த குடிநீர் தொட்டியின், நான்கு துாண்களும் சேதமாகி உள்ளன. எப் போது விழுமே என்ற அச்சத்திலேயே மக்கள் உள்ளனர். மக்கள் நலன் கருதி, துாண்கள் இடிந்த குடிநீர் தொட்டியை இடித்து விட்டு, புதிய தொட்டி கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

