/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முட்டை ஏற்றி வந்த லாரியில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்
/
முட்டை ஏற்றி வந்த லாரியில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்
முட்டை ஏற்றி வந்த லாரியில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்
முட்டை ஏற்றி வந்த லாரியில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 22, 2024 02:07 AM
வெண்ணந்துார்:நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அருகே, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி சங்கர் தலைமையிலான குழுவினர், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியிலிருந்து, தர்மபுரி நோக்கி சென்ற முட்டை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், ஒரு லட்சத்து, 32 ஆயிரம் ரூபாய் இருந்தது.
இதுகுறித்து, லாரியை ஓட்டி வந்த தர்மபுரியை சேர்ந்த கோகுல், 23, என்பவரிடம் விசாரித்தனர். ஆனால், அவரிடம் முறையாக ஆவணம் எதுவும் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.