/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இளம்பெண்ணை எரித்து கொன்ற கள்ளக்காதலன்
/
இளம்பெண்ணை எரித்து கொன்ற கள்ளக்காதலன்
ADDED : ஜூலை 26, 2024 11:47 PM
ராசிபுரம்,:நாமக்கல் மாவட்டம், பறவைக்காட்டைச் சேர்ந்தவர் ரமேஷ், 35. இவர் முதல் மனைவி பூங்கொடியுடன் வசிக்கிறார். ரமேஷின் இரண்டாவது மனைவி மணிமேகலை, 29. இவர், பட்டணம் அடுத்த குச்சிக்காடு பகுதியில், இரண்டு குழந்தைகளுடன் வசித்தார்.
நேற்று முன்தினம் காலை, பட்டணம் ஏரிக்கரையில் எரிந்த நிலையில் மணிமேகலை இறந்து கிடந்தார். ராசிபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
போலீசார் கூறியதாவது:
குச்சிக்காட்டைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி பாலசுப்ரமணி, 27. திருமணமாகி, ஆறு மாத குழந்தை உள்ளது. இவர், ரமேஷின் இரண்டாவது மனைவி வீட்டின் அருகே வசித்தார். இவருக்கும், மணிமேகலைக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த வாரம், அவர் மணிமேகலையை ஆத்துாரில் வீடு எடுத்து தங்க வைத்தார். தனியாக இருந்த அந்த பெண், அவரிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளார்.
இதையடுத்து, 24ம் தேதி, அவரை பட்டணம் ஏரிக்கரைக்கு அழைத்து சென்று, இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, அந்த பெண் மீண்டும் பணம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த மேஸ்திரி, மணிமேகலையை கல்லால் அடித்துக் கொலை செய்தார்.
பின், பெட்ரோல் ஊற்றி உடலுக்கு தீ வைத்து தலைமறைவானார். அவரை பிடித்து விசாரித்த போது, மணிமேகலையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இவ்வாறு போலீசார் கூறினர்.

