sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி சரிவு

/

நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி சரிவு


ADDED : ஜூலை 26, 2024 03:36 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''நாமக்கல் மண்டலத்தில், முட்டை ஏற்றுமதி குறைந்துள்ளது,'' என, கோழிப்பண்ணையாளர் சங்க தலைவர் சிங்கராஜ் தெரி-வித்தார்.

நாமக்கல்லில், நேற்று கோழிப்பண்ணையாளர்கள் சங்க பொதுக்-குழு கூட்டம் நடந்தது. தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்ததர். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தலைவர் சிங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்காச்சோளம் கிலோ, 18 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாக உயர்ந்து விட்டது. மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து மக்-காச்சோளத்தை இறக்குமதி செய்து, மானிய விலையில் பண்ணை-யாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வயது முதிர்ந்த முட்டை கோழிகளை, நேரடியாக கோழிப்பண்ணை-யாளர் சங்கம் மூலம் விற்பனை செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு பண்ணையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும், விலையில் இருந்து குறைத்து பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம். ஒவ்வொரு பண்ணையும் மாசு கட்-டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, தூய்மையுடன் வைத்திருக்க வேண்டும். இறந்த கோழிகளை உடனடியாக அகற்றுவதுடன், அவற்றை குறிப்பிட்ட பகுதிகளில் அதற்கான பெட்டிகளில் மட்-டுமே போட வேண்டும். கோழித் தீவனங்களான சோயா, புண்-ணாக்கு, மக்காச்சோளம் போன்றவற்றுக்கு மத்திய அரசு, 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கிறது.

நாடு முழுவதும் கோழி தொழிலை நம்பி ஏராளமானோர் உள்-ளனர். ஜிஎஸ்டி விலக்கு, மானிய விலையில் தீவனம் போன்ற-வற்றை வழங்கினால் பண்ணையாளர்கள் பயனடைவர். நாமக்கல் மண்டலத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி மிகவும் சரிவடைந்துள்ளது. இலங்கைக்கு செல்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஓமன், மஸ்கட் நாடுகளுக்கு, 15 சதவீத முட்டைகள் மட்டுமே செல்கிறது.

எத்தனால் தயாரிப்புக்கு மக்காச்சோளம் அதிகம் பயன்படுத்தப்ப-டுவதால், கால்நடைகளுக்கும், கோழித் தீவனங்களுக்கும் கிடைப்-பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு முட்டை விலை, 6 ரூபாய்க்கு விற்பனை செய்தால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும். தமிழக அரசின் காலை உணவு திட்டத்திலும் முட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். தற்போது சத்துணவுக்காக, 55 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகிறது. காலை உணவு திட்டத்-திலும் முட்டை சேர்க்கப்பட்டால், 60 லட்சத்திற்கும் மேலாக அனுப்ப வாய்ப்புள்ளது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us