/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு
/
100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு
ADDED : ஜூலை 26, 2024 03:04 AM
மோகனுார்: மோகனுார் ஒன்றியத்தில், 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திற-னாளிகள் மனு அளித்தனர்.
மோகனுார் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சி மற்றும் செங்கப்பள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கம் சார்பில் நேற்று காலை, பாலப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன், 100 நாள் வேலை கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்த திரண்டனர்.
தகவல் தெரிந்த போலீசார், நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்-படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்-றனர். முன்னதாக பாலப்பட்டி வருவாய் ஆய்வாளரிடம், 100 நாள் வேலை வேண்டி விண்ணப்ப மனு அளித்தனர். மாற்று திறனாளிகள் சங்க தாலுகா தலைவர் மாதேஸ்வரன், செயலாளர் பெருமாள், பாலப்பட்டி கிளைத்தலைவர் யோகராஜா, கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

